கதாநாயகிகள் கவர்ச்சிக்கு மாறியது தவறல்ல – ஸ்ரேயா

கதாநாயகிகளின் கவர்ச்சி பற்றி ஸ்ரேயா கூறியதாவது:-
சினிமாவில் நடிகைகளுக்கு நிர்ப்பந்தங்கள் உள்ளன. கட்டப்பாடுகளும் இருக்கிறது. பெரிய முதலீடுகள் செய்து படங்கள் எடுக்கின்றனர். அவர்களுக்கு லாபம் வர வேண்டும். எனவே இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் விருப்பப்படி நடக்க வேண்டியுள்ளது.
நடிகைகளின் கொள்கை, லட்சியங்கள் எல்லாம் மூட்டை கட்டி ஒதுக்கி வைக்க வேண்டி இருக்கிறது. கதாநாயகிகள் எல்லை தாண்டி விட்டனர். படு கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சிக்கின்றனர்.கண்ணீர் விட்டு மூக்கு சீந்தி நடித்தால் விருதுகள் வரலாம்.
அது மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள். நானே பார்க்க மாட்டேன். கவர்ச்சியாக நடித்தால்தான் நிலைக்க முடிகிறது. எனவே அதை தப்பாக பார்க்காதீர்கள். ரசிகர்கள் கவர்ச்சியைத்தான் விரும்புகிறார்கள். அவர்கள் மனநிலையில் மாற்றம் வந்தால் கவர்ச்சி விலகும்.
இவ்வாறு அவர் கூறினார்.