அண்மையில் வெளியான டப்பிங் படங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது, அனுஷ்காவின் 'அருந்ததீ'.
'ரெண்டு' படத்துக்கு பிறகு தமிழில் முன்னணியில் வலம் வர அனுஷ்காவுக்கு உறுதுணைபுரிந்தது அப்படம்.
வேட்டைக்காரன், சிங்கம் படங்களைத் தொடர்ந்து அவர், சிம்புவின் 'வானம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், அண்மையில் தமிழக அரசின் 'கலைமாமணி' விருது பெற்ற அனுஷ்கா.
ஒரேநேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்தாலும், ஆந்திராவில் காட்டும் தாராளத்தை இங்கு கடைபிடிப்பதில்லையாம்.
அந்தக் குறைகளை நீக்கும் வகையில், தெலுங்கில் ஹிட்டான அவரது கலேஜா மற்றும் ரகடா ஆகிய படங்களின் தமிழ் டப்பிங்காக வெளிவரவுள்ளது.
கலேஜா தமிழில் 'பத்ரா' என்ற பெயரிலும், ரகடா - 'வம்பு' என்ற பெயரிலும் வெளிவர இருக்கிறது.
