சர்ச்சையை கிளப்பும் நடுநிசி நாய்கள்


கௌதம் வாசுதேவ மேனன் இய்கிய எந்தப் படமும் நடுநிசி நாய்கள் அளவுக்கு சர்ச்சையை கிளப்பவில்லை எனலாம். படத்தைப் பார்த்த ச‌ரி பாதி பேர், படத்தில் வன்முறை அதிகம் என்ற கருத்தையே தெ‌ரிவித்துள்ளனர்.
நடுநிசி நாய்கள் சைக்கோவை பற்றிய படம். அவன் ஏன் அப்படி ஆனான் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. முக்கியமாக இதுவொரு உண்மைக் கதை. பாலியல் வன்முறை அளவுக்கதிகமாக தலைவிhpத்தாடும் ஒரு நாட்டில் அதை பேசாமல் அமுக்கி வைப்பதைவிட, விவாதித்து அதற்கான தீர்வை கண்டடைவதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்தவகையில் நடுநிசி நாய்களின் தேவையை ரசிகர்கள் உணர வேண்டும்.
அதேநேரம் உண்மையைச் சொல்கிறேன் என்று அப்பட்டமாக காட்சிகளை அமைக்கும் போது அது விவாதத்தை கிளப்பாமல் விவகாரமாகப் போகும் சாத்தியமும் உள்ளது. பி, சி யில் இந்தப் படத்துக்கு பெண்கள் கூட்டம் மிகக் குறைவு என்பது முக்கியமானது.